ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ்

கடந்த மாதம் 30-ஆம் தேதி ஈரோடு ரயில் நிலைய பகுதியில் கஞ்சா விற்றதாக கோவை, குனியமுத்தூர், காந்தி நகரைச் சேர்ந்த அப்சல் (19) மற்றும் கோவை பீளமேடு, முருகன் நகரைச் சேர்ந்த ரெனால்ட் லியோனி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி