ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் வேம்பட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளியப்பன், இன்று காலை தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, கன்றுக்குட்டியை மரத்தில் கட்டிவிட்டு திரும்பியபோது, சுற்றித்திரிந்த தெரு நாய்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைக் கடித்தன. இதில் நான்கு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி காளியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.