திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அமமுகவின் திருப்பூர் மாவட்டச் செயலாளருமான விசாலாட்சி, நேற்று (மே 16) தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முறைப்படி இணைந்தார். கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு சென்ற விசாலாட்சி, தனது ஆதரவாளர்களுடன், அமைச்சரை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் தவெகவில் இணைந்தனர்.