சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து உணவு டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்த இப்ராஹீம் ஷா (47), கொத்தமங்கலம் எம்.டி.ஆர். சாலையில் உணவு டெலிவரி செய்யச் சென்றபோது, வளைவில் அதிவேகமாகத் திரும்பியதில் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்தது. இது குறித்து பவானிசாகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.