ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஜே.எஸ். நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய அட்டை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் உணவு இடைவேளைக்கு சென்றிருந்தபோது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய அட்டைகளில் தீ வேகமாகப் பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.