அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த தந்தை ஜடேகவுடர் (60), அவரது மகன் கெம்பன் (45) ஆகியோரை கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களது வீட்டில் இருந்து சுமார் 600 கிராம் கஞ்சா செடிகளும், 100 கிராம் காய்ந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சோழகனையைச் சேர்ந்த ஈரய்யன் (55) என்பவர் ராகி பயிரில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்தும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.