ஈரோடு: யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த காடு பசுவன்மாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதேசாமி, நேற்று (பிப்.22) தனது மக்காச்சோள தோட்டத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க காவலுக்கு இருந்தபோது, ஒற்றை யானை பயிர்களை சேதப்படுத்த முயன்றது. யானையை விரட்ட முயன்றபோது, அது தாக்கி மாதேசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி