அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை இன்று (நவம்பர் 26) ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த திடீர் ராஜினாமா அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் விஜய்யுடன் கைகோர்க்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவரது இந்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.