ஈரோடு: மது, கஞ்சா, குட்கா விற்ற 6 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில், சட்டவிரோதமாக மது விற்ற துரைசாமி, ஜெய்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பங்களாபுதூரை அடுத்த துரையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மளிகை கடைகளில் குட்கா விற்ற துளசிமணி, சுதீப் நாயக், சுப்பையன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி