ஈரோடு: சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் செக் போஸ்ட் அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த திருப்பூர் மாவட்டம் மலையம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அந்தியூர் அடுத்த செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் மது விற்ற, அதேப்பகுதியைச் சேர்ந்த செல்வன் (40), ஈரோடு அடுத்த லட்சுமிபுரத்தில் மது விற்ற, அதேப்பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி