கோபி அருகே தேர்வு சரியாக எழுதாததால் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கோபி அருகே உள்ள புதுவள்ளியம்பாளையம் தென்காரில்றல் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் கவுசிக் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கோபியில் இருந்து கோவைக்குத் தினமும் பஸ்சில் சென்று வந்து உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதைக் கண்டதும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை கவுசிக் சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.