அப்போது எதிர்பாராத விதமாக நாகம்மாளின் சேலை முந்தானை தவறி தீயில் விழுந்து விட்டது. இதனால் அவரது சேலையில் தீ மெலிமெலிவென பிடித்தது. நாகம்மாள் வேதனையால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த நாகம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகம்மாள் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.