ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து பனியன் துணிப் பண்டல்களை ஏற்றி வந்த லாரி, சிறுவலூர் மயானம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் துணிப் பண்டல்கள் சாலையில் சிதறின. லேசான காயமடைந்த ஓட்டுநர் சின்னதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.