தாளவாடி தேங்காய்பருப்பு ஏலம்: ரூ.1.86 லட்சத்திற்கு விற்பனை

தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய்பருப்பு ஏலத்தில் 19 மூட்டைகள், 9.34 குவிண்டால் எடை கொண்ட தேங்காய்பருப்பு ரூ. 1,86,784-க்கு விற்பனையானது. ஒரு கிலோ தேங்காய்பருப்பு அதிகபட்சமாக ரூ. 228.99, குறைந்தபட்சமாக ரூ. 120.99, சராசரியாக ரூ. 174.99 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ததாக விற்பனைக் கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி