ஈரோடு, கோவைக்கு முதல்வர் சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் கள ஆய்வுப் பயணமாக வருகை தரவுள்ளார். வருகிற 25 ஆம் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவை அவர் திறந்துவைக்கிறார். மேலும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே வருகிற 26 ஆம் தேதி மாவீரன் பொல்லான் சிலை மற்றும் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் இரு மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி