ரூ31 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கடுக்கம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் ரூ31 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோரக்காட்டூர் ரவிந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திகேயன், சி.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி