மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதற்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூரில், மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் முன்கூட்டியே வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, நம்பியூர் பேருந்து நிலையம் பகுதியில் மகளிருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நம்பியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் என்.எஸ். ஆனந்தகுமார், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கமிட்டி நம்பியூர் தெற்கு வட்டாரத் தலைவர் ஜவகர், வடக்கு வட்டாரத் தலைவர் கே.பி. சண்முகசுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நம்பியூர் நகர தலைவர் சதீஷ்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பு செயலாளர் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டனர். திமுகவினர் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி