சத்தியமங்கலம்: காட்டெருமை மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், ஆசனூர் அருகே காரப்பள்ளம் பகுதியில் காட்டெருமை ஒன்று காரின் மீது மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஸ்டீபன் ராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டெருமை திடீரென காரின் முன் பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி