சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி திகினாரை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மதன் கார்த்திக், நேற்று இரவு அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டான். பொதுமக்கள், தாளவாடி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.