ஈரோடு: சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச வாலிபர்கள்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஷாகித் (25), முகமது சர்க்கார் (19) ஆகிய இரு வாலிபர்களை பங்களாப்புதூர் போலீசார் மீட்டுள்ளனர். திருப்பூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர்கள், உரிய உரிமம் இன்றி தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி