ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில், கோவையிலிருந்து மாண்டியாவிற்கு பேங்க் லாக்கர் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் ஏழாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மகேஷ் சிறிய காயங்களுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.