ஈரோடு மாவட்டம் கடத்தூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காசிபாளையம், பெரியகொடிவேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொத்துக்காடு பொது கழிப்பிடம் அருகே நின்றிருந்த கவியரசு என்ற நபர் போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். கடத்தூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.