சித்தோடு அகில்மேடு வீதியில் உள்ள தனியார் கொரியர் சர்வீஸ் மூலம் போதை மாத்திரைகள் வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், 8100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோட்டைச் சேர்ந்த கெளரி சங்கர், விக்னேஷ், முகமது ஜமீல், தீபக் ஆகியோரையும், சித்தோடு காவல்துறையினர் கவியரசன், அவரது மனைவி சுஷ்மிதா, கார்த்திக், அரவிந்தன் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.