சத்தியமங்கலத்தில் குட்கா 7 கிலோ பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசார் கொட்டுவீரம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில், குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வடக்குபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் (55) என்பதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து, ரூ. 10, 500 மதிப்பிலான 7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். 

இதேபோன்று, பர்கூர் செக்போஸ்டில் போலீசார் நடத்திய சோதனையில், நாமக்கல் மாவட்டம் தொட்டிக்காரன்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேலுவை (54) கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 300 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி