402 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த நிச்சாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டை சோதனை செய்ததில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 402 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி