சென்னிமலை அருகே பாலக்காட்டு புதூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 15க்கும் மேற்பட்ட ஆடுகளில், நேற்று முன்தினம் இரவு தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் 4 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இது குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தெரு நாய்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.