ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஎன்சி கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற கலைச்செல்வன் என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் மகாராஷ்டிராவில் இருந்து மொத்தமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைக்காக ஒரு மாத்திரையை ரூ.400க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.