ஈரோடு: வெளிமாநிலத்துக்கு கடத்த பதுக்கிய 220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் டி.ஜி.புதூர் அருகே உள்ள குள்ளநாயக்கனூர் கிராமத்தில் ஒரு காலி இடத்தில், பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 பேர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலத்துக்கு கடத்துவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் 5 மூட்டைகளில் சுமார் 220 கிலோ அளவு கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன், எடை எந்திரம், சாக்கு பைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி