ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே தேவனாம்பாளையம் கிராமத்தில் விவசாயி குமார், குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். தெருநாய்களின் தொந்தரவு காரணமாக தனது தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து 29 ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தபோது, தெருநாய்க் கூட்டம் பட்டிக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 20 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.