கோபி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள புதுவள்ளியாம்பாளையம் பிரிவு பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோபிசீதாலட்சுமிபுரத்தை சேர்ந்த அஜீத் (வயது 23), ஈரோடு முள்ளாம்பரப்பை சேர்ந்த ரகுராம்காந்தி (21) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி