ஈரோடு: 100 நாள் வேலை திட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஈரோடு-முத்தூர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி