தவிட்டுப்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவி தாரணி (16) பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர்ந்து போனில் அழைத்து மிரட்டியதாகவும், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரே காரணம் என்றும் மாணவி பெற்றோரிடம் கூறியிருந்தார். மறுநாள் மாணவியின் தந்தையையும் அந்த வாலிபர் போனில் ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.