ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயற்சி

பெரிய சேமூரைச் சேர்ந்த ஓட்டுநர் தென்னரசு (53), தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 7 ஏக்கர் பூர்வீக நிலத்தில் தனக்குரிய பங்கை பெறுவதற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் தென்னரசு, அவரது தந்தை 45 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் இறப்புச் சான்றிதழ் பெற முடியவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகள்  கைவிரித்ததால், தென்னரசு இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி