ஈரோடு: கணவரின் குடிப்பழக்கத்தால் இளம் பெண் தற்கொலை

ஈரோடு அடுத்த 46 புதூரைச் சேர்ந்த ஹரி. இவரது மனைவி மீனா (28). இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மதுபோதையில் வீட்டிற்கு வரும் ஹரி, மீனாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரி, மீனாவுடன் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, மீனா அரளி விதையை அரைத்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், மீனாவை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி