நூல் மில் பெண் தொழிலாளி திடீர் மரணம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துசாமி இவர் இறந்து விட்டார். இவரது மகள் மாலதி வயது 36. இவரது கன்வறம் ஒரு வருடம் முன்பு இறந்துவிட்டார். தற்போது மாலதி பெருங்கருணைபாளையத்தில் தங்கி நூல் மில்லில் வேலை செய்து வந்தார். திடீரென மயங்கி விழுந்த அவர் உள்ளூரில் முதலுதவி அளிக்கப்பட்டார்.

ஈரோட்டில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி