தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் நான்கு மையங்களில் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத 3,174 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில், 450 பேர் பங்கேற்கவில்லை.