ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது கட்டிட தொழிலாளி பசுவராஜ், கடம்பூரிலிருந்து இருட்டிபாளையம் நோக்கி இரவு ஒன்பது மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 12-வது மைல் என்னும் இடத்தில் காட்டு யானை ஒன்று வழிமறித்து அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல் நிலையம் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.