ஈரோடு: சேலையில் தீப்பிடித்து உடல் கருகிய பரிதாபம்

ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 50 வயது கூலித்தொழிலாளி மணியாள், வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைத்து தூங்கியபோது, தீ அவரது சேலையில் பிடித்து பரவியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணியாள் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கண்ணம்மாள் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி