தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.
ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் வெறும் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. அதேசமயம் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இந்த வார ஜவுளி மார்கெட்டுக்கு உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிக அளவில் இருந்தது.