ஈரோடு: 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் முத்துசாமி

மொடக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி உரையாற்றினார். தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் 60,000 வாக்குகள் வரை முன்னிலையில் இருப்பதாகக் கூறினார். இந்த வெற்றி வாய்ப்பு போதுமானது அல்ல என்றும், மொடக்குறிச்சியில் இன்னும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தைப் பெற தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆய்வுகளின் அடிப்படையில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தொடர்புடைய செய்தி