ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன், 234 தொகுதியிலும் விஜய்யே வேட்பாளர் என்றும், ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்டுவோம் என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த விஜய்க்கு மட்டுமே முடியும் என்றும், 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் தேசிய கொடியை ஏற்றுவார் என்றும் அவர் தெரிவித்தார்.