ஓசூரில் இருந்து செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் நவீன்குமார் களைப்பில் தூங்கியுள்ளார். இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. லாரி வேகமாக சென்று மோதியதால் முன்பக்க இரண்டு சக்கரங்களும் லாரியில் இருந்து பிரிந்தது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் நவீன் குமார் காயம் இன்றி உயிர் தப்பினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி ஓட்டுநர் நவீன்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல் வாய்ப்பாக அவ்வழியாக வேறு வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.