ஈரோட்டில் பயிற்சி மையம் துவங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், திறனகம் மாவட்ட திறன் மையம் தொடக்க விழாவினை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக ஈரோட்டில் பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கந்தசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே. செல்வராஜ் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி