டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற முக்கிய இடங்களில் நேற்று (நவம்பர் 10) இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் வாகனத் தணிக்கை, சந்தேகத்திற்கிடமான நபர்கள் விசாரணை நடத்தினர். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.