ஈரோடு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முருகேசன் மற்றும் மதன் ஆகிய இருவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்ற பிரவீன் என்பவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். மொத்தம் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.