ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு அருகே, திண்டல் புறவழிச்சாலை சாலையோரத்தில் உள்ள புதரில் பெண் சடலம் கிடந்தது. இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மாவட்ட எஸ்பி சுஜாதா விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.