ஈரோடு வனச்சரகத்தில் சென்னிமலை, கொடுமுடி, வெள்ளியங்கரடு, வாய்பாடி, வெள்ளோடு ஆகிய பகுதிகளில் நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த பணியில் வனச்சரகர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், உயிரியலாளர் என வனத்துறை பணியாளர்கள் 90 பேரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 50 பேரும் ஈடுபட்டனர். கணக்கெடுக்கும் பணி நேற்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை நடந்தது.
அப்போது காட்டுக்கோழி, நாத்தண்ணி, வான்கோழி, கருங்குருவி, கோழிக்குருவி, கடற்காகம், பருந்து, சாம்பல்நாரை, கழுகு, வானம்பாடி, நிலக்காகம், சின்னப் பூங்குயில், காட்டுப்புறா, தளபாட்டி பறவை, பச்சைத் தூக்கான், மரங்கொத்தி, நெருப்புக்குருவி, அரசன் பறவை, முல்லைப் பறவை அதிகளவில் காணப்பட்டதாக வனத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர். கொண்டை ஈச்சிறகு, கொம்பன் மரச்சர்க்குருவி, பழுப்பு மீன் ஆந்தை, தட்டான் குருவி போன்ற பறவைகளும் தென்பட்டன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிளி அப்பாலே நாயுடு மற்றும் உயிரியலாளர் மணி ஆகியோர் கூறும்போது, 'நிலவாழ் பறவைகள் நிலத்தில் உணவு தேட