ஈரோடு: 100% வாக்குப் பதிவு.. தண்ணீரில் மிதந்து விழிப்புணா்வு

ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச. கந்தசாமி, நேற்று (ஏப்.7) வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியினைத் தொடங்கி வைத்தார். இதில் வரும் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஈரோட்டைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் (42) என்ற மாற்றுத்திறனாளி பதாகையை கையில் ஏந்தி அங்குள்ள நீச்சல் குளத்தில் நீரில் மிதந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தப் போட்டியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி