ஜெயலலிதா பிறந்த நாளுக்கு மாரியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம்

ஈரோட்டில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், முன்னாள் மண்டலத் தலைவர் இரா. மனோகரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்மனுக்கு பால், இளநீர், தயிர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் செய்தனர். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையவும், கழகத்தின் வளர்ச்சி வேண்டியும் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி