ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் செயல்படத் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி அறிவித்துள்ளார். கரூர், மதுரை, வெள்ளக்கோவில் மார்க்கங்களில் செல்லும் அரசு பேருந்துகள் இனி இந்த புதிய நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.